கடந்த பல வருடங்களாக கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் ரொறன்ரொ பெரும்பாகத்திலும் ஸ்காபுறோவிலும் மக்கள் சேவையாற்றும்Frontline Community Centre நிறுவனத்தில் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பேச்சாளர் ஒருவரின் உரைநிகழ்ச்சி இடம்பெற்றது.
Frontline Community Centre நிறுவனத்தின் நிறுவனரும் தலைவியுமான திருமதி விஜயா குலா தலைமை வகித்து கரு பழனியப்பன் அவர்களையும் வரவேற்றார்.
அண்மையில் கனடா உதயன் பத்திரிகையின் 28வது ஆண்டு விழாவில் சிறப்புயைரையாற்றுவதற்காக உதயன் பத்திரிகை நிறுவனத்தால் அழைக்கப்பெற்றிருந்த தமிழ்நாட்டின் ‘தமிழா!தமிழா!’ தொலைகாட்சி நிகழ்ச்சி புகழ் கரு பழனியப்பன் Frontline Community Centre நிறுவனத்திலும் உரையாற்றுவதற்காக அழைக்கப்பெற்றிருந்தார்.
15-12-2024 ஞாயிற்றுக்கிழமையன்று மதிய நேரத்தில் கரு பழனியப்பன் அவர்கள் Frontline Community Centre நிறுவனத்தின் கூடட மண்டபத்தில் உரையாற்றினார்.
அழைக்கப்பெற்றிருந்த அங்கத்தவர்கள் பலரும் அவரது உரையைக் கேட்டு மகிழ்ந்தார்கள். தொடர்ந்து கரு பழனியப்பன் அவர்கள் சபையோருடன் கலந்துரையாடியும் பல பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்த கொண்டார்.
அன்றைய தினம் மேற்படி நிகழ்ச்சியை விரிவுரையாளர் பொன்னையா விவேகானந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
அத்துடன் ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சர் றேமண்ட் சோ அவர்களும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் அங்கு சமூகமளித்து கரு பழனியப்பன் அவர்களை கௌரவித்தார்கள்