மார்க்கம் நகரில் தமிழ் பேசும் மூத்தவர்களுக்காக இயங்கிவரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பின் வருடாந்த நத்தார் கொண்டாட்டம்
மார்க்கம் நகரில் தமிழ் பேசும் மூத்தவர்களுக்காக இயங்கிவரும் Boxgrove Seniors Community Wellness Club அமைப்பின் வருடாந்த நத்தார் கொண்டாட்டம் கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள The Estate Banquet Hall மண்டபத்தில் நடைபெற்றது.
அன்றைய நிகழவிற்கு சங்கத்தின் தலைவி திருமதி சுந்தரேஸ்வரி யோகராஜா தலைமை தாங்கினார். அவருக்கு உதவியாக இருந்து சங்கத்தின் இயக்குனர் சபையினர் அனைவரும் நத்தார் கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்த ஒத்தாசையாக இருந்தார்கள்.
சங்கத்தின் அங்கத்தவர்களாக விளங்கும் நீண்ட கால உறுப்பினர்கள் அங்கு கௌரவிக்கப்பெற்றார்கள்.
அத்துடன் சங்கத்தின் அங்கத்தவர்களான மூத்த தமிழ் அன்னையரும் தந்தையரும் பங்கு கொண்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் அனைத்தும் சபையோரை மகிழ்வித்தன.
குறிப்பாக அங்கு இடம்பெற்ற மூத்தவர்கள் கலந்த கொண்ட ‘புகழ்பெற்றவர்களை ஞாபகமூட்டல்” என்ற தலைப்பில் இடம்பெற்ற ‘வினோத உடை அலங்கார’ நிகழ்ச்சியில் சமயப் பெரியோர்கள், தமிழ் அறிஞர்கள், அரசியல் தலைவர்கள் என பலரை ஞாபகமூட்டும் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் நேர்த்தியாக தமது ஆற்றலைக் காட்டினர். அவர்களுக்கு பயிற்சி அளித்த நடன ஆசிரியை மாலினி பரராஜசிங்கம் அவர்களும் கௌரவிக்கப்பெற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாகாண அரசின் பிரதிநிதி லோகன் கணபதித மற்றும் மார்க்கம் நர சபையின் உறுப்பினர் யுனைற்றா நாதன் ஆகியோர்
Boxgrove Seniors Community Wellness Club அமைப்பின் சேவைகளைப் பாராட்டி வாழ்த்துப் பத்திரங்களை வழங்கினார்கள்.
Ganeshananthan- Local Journalism Initiative Reporter