முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மன்மோகன் சிங் இழப்பு வருத்தம் அளிக்கிறது. மன்மோகனின் தொலைநோக்கு மற்றும் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா – அமெரிக்க இடையிலான நல்லுறவு ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியமில்லை. இரு நாடுகளின் வளர்ச்சிக்காக புதிய பாதை அமைத்து, அதை வலுப்பெறச் செய்தவர். அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை உருவாக்குவது, முதல் இந்தோ-பசிபிக் கூட்டமைப்பின் நாடுகளுக்கு இடையே குவாட் கூட்டமைப்பு தொடங்குவதற்கு உதவியது வரை, அவர் நமது நாடுகளையும் உலகையும் தொடர்ந்து பல தலைமுறைகளாக பலப்படுத்தும் பாதையை உருவாக்கி தந்ததின் முன்னேற்றத்தையும் பட்டியலிட்டார். அவர் ஒரு உண்மையான அரசியல்வாதி. அர்ப்பணிப்புள்ள மக்கள் சேவகர். அனைத்தையும் தாண்டி மிகவும் அன்பான, அடக்கமான மனித புனிதர். 2008-ம் ஆண்டு வெளிநாட்டு உறவுகளுக்கான செனட் வெளியுறவு குழுவின் தலைவராகவும், 2009-ம் ஆண்டு அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்த போது துணை அதிபராக பிரதமர் சிங்கை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். 2013-ல் டில்லியில் அவர் எனக்கு விருந்து அளித்தார். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அதில் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.