சத்யராஜ் , சேரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பயாஸ்கோப்’ படம் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வெளியாகிறது. சினிமா மரபுகளை உடைத்து முழுவதும் கிராமத்து மனிதர்களை நடிக்க வைத்து உருவான ‘வெங்காயம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தவர், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். இவர் அடுத்து இயக்கியிருக்கும் படம், ‘பயாஸ்கோப்’. 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வெளியாகிறது. முற்றிலும் கிராமத்து புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜும், சேரனும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். தாஜ்னூர் இசையமைத்துள்ளார். ‘சினிமா பற்றி எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் சேர்ந்து ஒரு படத்தை எப்படி எடுத்தாங்க அப்படிங்கறதுதான் கதை. நான் ‘வெங்காயம்’ படத்தை என் சொந்த ஊர்ல எடுத்தேன். அப்ப எனக்கு நடந்த நகைச்சுவையான அனுபவங்களை திரும்பவும் ஒரு படமா உருவாக்கி இருக்கிறேன். ஏற்கெனவே எடுத்து ரிலீஸான படம், எப்படி எடுக்கப்பட்டதுன்னு ஒரு படமாக உருவாகுறது, தமிழ்ல இதுதான் முதல் முறை. ஒரு படம் உருவாகும்போது அதை எப்படி எடுத்தோம்னு அப்பவே எடுக்கிறது மேக்கிங் வீடியோ. இது அப்படியில்லை. அந்த சம்பவங்களை வச்சுகிட்டு ஒரு கதை ரெடி பண்ணி அதை படமாக்கி இருக்கேன்’ என்கிறார் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார். இதன் முன்னோட்டம் கடந்த 22ம் தேதி வெளியானது. இதற்கு மிஷ்கின் குரல் கொடுத்திருந்தார். இதனை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டிருந்தார். இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஹா ஓ.டி.டி இந்தப் படத்தினை வெளியிட இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார்,
