தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி மற்றும் தம்பி ராமையா இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்தனர். இந்த நிலையில் ராஜாகிளி என்ற புதிய படத்தில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், பழ.கருப்பையா, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, ‘கும்கி’ அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், தீபா, பாடகர் கிரிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, வசனம், திரைக்கதை, பாடல் வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். இந்தப் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜாகிளி திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பாடலான ரவுண்ட் தி கிளாக் பாடலின் லிரிக் காணொளி படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலின் வரிகளை தம்பி ராமையா எழுதி, பாடியுள்ளார்.