இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி.சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள இவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் (டிச.22) அன்று திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் புதுமண தம்பதிகளான பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.
