ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி60 ராக்கேட் விண்ணில் வெற்றிக்கரமாக ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று இரவு 8.85 மணிக்குத் தொடங்கியது. இதனையடுத்து நேற்று இரவு 10 மணிக்கு விண்வெளி ஆய்வு மையத்தின் 1வது தளத்தில் இருந்து ஏவப்பட்டது. 44.5 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட் இரண்டு விண்கலங்களைக் கொண்டு சென்றது. விண்கலம் ஏ மற்றும் பி, ஒவ்வொன்றும் 220 கிலோ எடையுள்ளவை. 2035-க்குள் இந்திய ஆய்வு மையத்தை விண்ணில் அமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி-சி60 இன் ஏவுதல் 2024-இல் இஸ்ரோவால் மேற்கொள்ளப்பட்ட கடைசி பணியாகும்.
விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் ஸ்பேடெக்ஸ் திட்டத்திற்கான சாசர், டார்கெட் ஆகிய இரண்டு விண்கலங்களும் வெற்றிகரமாக பிரிந்தது. நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும் இந்த தொழில்நுட்ப பரிசோதனை உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.