உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1,041வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்த பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ரஷியா மீது நேற்று இரவு 68 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்கள் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.