2024 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 4 பேருக்கு கேல் ரத்னா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத், பாரீஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2 வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
