தெற்கு தாய்லாந்தில் உள்ள யாலா மாகாணத்திற்கு சுற்றுலா செல்வதற்காக பாங்காங் அருகே உள்ள சமுத் சகோன் மாகாணத்தில் வசிப்பவர்கள் குழு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த சுற்றுலா பேருந்து சூரத் தானி மாகாணத்தில் உள்ள சாலையின் கூர்மையான வளைவில் திரும்பும்போது சறுக்கி மரத்தில் மோதி கவிழ்ந்து. இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
