பு.கஜிந்தன்
உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவருக்கும் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அவர்களுக்கும் இடையில் கடந்த 30ம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் சுகாதார ரீதியான சவால்களை நிவர்த்தி செய்ய வேண்டுகோள் விடப்பட்டது. பாடசாலையின் சிற்றூண்டிசாலையின் தரத்தை உயர்த்துதல், விரைவு உணகளையும் எண்ணெய் உணவுகளையும் பொதிசெய்த உணவுகளையும் தடைசெய்தல். கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தூய்மைப்படுத்தல், தூயநீரினை உறுதிப்படுத்தல், பெண்பிள்ளைகள் மத்தியில் அதிகரித்துள்ள இமோகுளோபின் குறைபாடு, கட்டிளமைப்பருவ உணவுப்பழக்கம் என்பன பற்றி தெளிவாக பேசப்பட்டது.
அதற்கான நடவடிக்கை 2025ஆம் ஆண்டு தீவிரமாக மேற்கொன்ன நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உறுதியாக தெரிவித்தார்