திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. தற்போது வரை நான்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. துரைமுருகனின் வீடு அருகே திமுகவினர் குவிந்து வருவதால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2019 நாடாளுமன்றத்தேர்தலிபோது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூ.11 கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.