மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை மத்திய சிறையில் கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்தது. இதில் சிறைத்துறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய சிறையில் கைதிகளால் தபால் அனுப்புவதற்கான கவர்கள், அட்டைகள் போன்ற ஸ்டேஷனரிப் பொருட்கள், மருத்துவ உதவிப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை பல்வேறு அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது போலவும், கைதிகளுக்கு சம்பளம் கொடுத்தது போலவும் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு அதன்மூலம் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.