நீண்ட இடைவேளிக்கு பிறகு மீண்டும் விஷ்ணுவர்தன் தமிழில் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு நேசிப்பாயா என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி சங்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் அதர்வாவின் தம்பியாவார் ஆகாஷ் முரளி. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இப்படத்தின் மூலம் ஆகாஷ் முரளி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தின் முன்னோட்டம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான `தொலஞ்ச மனசு’ என்ற பாடல் யுவன் ஷங்கர் ராஜா குரலில் கடந்த மாதம் வெளியானது. இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரபு, ராஜா, கல்கி, ஷிவ் பண்டிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. முன்னோட்ட காட்சிகள் மிகவும் ஆக்ஷன் மற்றும் காதல் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் ஆகாஷ் முரளிக்கு ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
