2023 ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் நயன்தாரா. அவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு தியான் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘லவ் ஆக்ஷன் டிராமா’. ஷான் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். படம் வெளியாகிய போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிப் இயக்கியுள்ளனர். பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் முதல்காட்சி பதாகையை படக்குழு வெளியிட்டுள்ளது.
