உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மோர் 4 புரடொஷன் தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது…
கண்நீரா தலைப்பே மிக அருமையாக உள்ளது. படம் சிறப்பாக வந்திருக்கிறது இதில் சிறப்பு என்னவென்றால் மனைவி கதை எழுதியுள்ளார், கணவர் இயக்குநராகப் படம் எடுத்திருக்கிறார். சின்னப்படங்கள் பார்க்கத் திரையரங்கிற்குக் கூட்டமே வருவதில்லை என திரையரங்கில் சொல்கிறார்கள். சினிமா பெரிய ஆபத்தில் இருக்கிறது. இன்று சின்னப்பட்டங்கள் பார்க்க ஆட்கள் இல்லை, தியேட்டரும் இல்லை, படம் நேரத்திற்கு ஒர்த்தாக இருந்தால் மட்டுமே மக்கள் வருகிறார்கள். பெரிய ஹீரோ படங்களுக்கு இந்த பிரச்சனையில்லை. இதை அனைவரும் அமர்ந்து பேச வேண்டும்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது….. மலேசியாவில் இப்படத்தை எடுத்து தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும். மலேசியாவில் இப்படத்தை எடுத்து தமிழ் நாட்டில் இப்படத்தை வெளியிடும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். கண்நீரா அருமையான காதல் கதையை சொல்கிறது. கண்நீரா பெண்களின் கண்ணீரை பேசுகிறதா சந்தோசத்தைப் பேசுகிறதா என படம் வந்தால் தெரியும்.
இந்த படத்தை கதிரவென் இயக்கி நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி கவுர், மாயா கிளம்மி, நந்தகுமார் என்கேஆர் ஆகியோர் நடித்துள்ளனர். படத்தின் கதை எழுதி, இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் கௌசல்யா நவரத்தினம்.