கனடிய அரசியல் தளத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வு எப்போது?
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இன்னும் சில நாட்களில் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் ஆச்சரியமும் நிறைந்த நாட்களாக இனிவரும் மூன்று அ ல்லது நான்கு நாட்கள் அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் அத்துடன் கனடிய அரசியல் தளத்தில் எதிர்பார்க்கப்படும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகின்ற பிரதமரின் பதவி விலகல் பெரும்பாலான கனடியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க கடந்த சில மாதங்களாக கனடாவின் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மாத்திரமல்ல. பிரதமர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் பலத்த குரல் எழுப்பி வந்துள்ளதும் பிரதமரது பதவி விலகலுக்கு முக்கிய காரணியாக விளங்குவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
இதற்கிடையில் எதிர்வரும் 8ம் திகதி புதன்கிழமை ஒட்டாவா மாநகரில் ஆளும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள கூட்டம் நடைபெறவுள்ளதெனவும். எனவே அன்றைய தினம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவர்கள் தனது பதவி விலகலை அறிவிப்பாரா அல்லது; அதற்கு முன்னர் வரும் நாட்களில் அறிவிப்பாரா அல்லது எதிர்வரும் தேர்தல்வரை தான் பிரதமராக இருந்து அரசாங்கத்தை தலைமை தாங்கிச் செலவாரா என்பதை நிச்சயமாகத் தெரிவிக்க இலலாமல் உள்ளதாக. கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் தனிப்பட்ட பதிவுகளிலிருந்து அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
மேலும் இச் செய்தி எழுதப்பட்டுக்கொண்டிரக்கும் 5ம் திகதி ஞாயிறு அன்று இரவில் எமக்கு கிடைத்த ஊர்ஜிதம் செய்ய முடியாத தகவல் ஒன்றின் படி 6ம் திகதிதிங்கள்கிழமை மதியம் லிபரல் தலைவரான ட்ரூடோ ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களாக, பிரதமமர் ட்ரூடோ அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை எதிர்கொண்டார் எனவும் பியர் பொய்லீவ்ரின் கன்சர்வேடிவ் கட்சியானது தேசிய கருத்துக் கணிப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதால் பிரதமரது AND சொந்தக் கட்சியான லிபரல் கட்சிக்குள் அவரது தலைமைக்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு எழுந்துள்ளதாகவும் எனினும் இதற்கெல்லாம் பதில் எதுவும் தெரிவிக்காமல் பிரதமர் ஜஸ்ரின் அவர்கள் தனது வழமையான கடமைகளைக் கவனித்து வருவதாகவும் கோவைகளில் கையெழுத்திடுவதாகவும் ஒட்டாவில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்ரூடோவின் நீண்டகால அரசியல் பங்காளியும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ப்ரீலேண்ட் என்னும் பெண்மணி கடந்த மாதம் தனது ராஜினாமாவை திடீரென அறிவித்த நாளிலிருந்து மட்டுமே அழுத்தம் அதிகரித்துக் காணப்படுகின்றது என்றும் . – நிதி அமைச்சராக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ட்ரூடோவின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார் என்பதையும், சாத்தியமான கட்டணப் போரில் தேவைப்படும் இருப்புக்களை வைத்திருப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அதிக பொதுப் பணத்தை செலவழிக்க வேண்டும் என்றும் அவர் பிரதமருக்கு பரிந்துரைத்த காரணத்தால் மட்டுமே அவர்கள் இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போதிருந்து, ட்ரூடோ அவரை ராஜினாமா செய்வதற்கான அழுத்தங்களை எதிர்கொண்டார், எனவும் ஏனெனில் எம்.பி.க்கள் பலர் முன்னர் அவரது தலைமையை எதிர்த்தவர்களுடன் இணைந்து கொண்டதனால் பிரதமருக்கு எதிரான வலுவான போராட்டம் உட்கட்சிப் போராட்டமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அறியப்படுகின்றது.
இதேவேளை பிரதமர் ஜஸ்ரின் அவர்களை பதவியிலிருந்து அகற்றினால் இவரது இடத்தை நிரப்புவதற்கு சில சாத்தியமான போட்டியாளர்கள் அமைதியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதில் ஃப்ரீலேண்ட், முன்னாள் பாங்க் ஆப் கனடா கவர்னர் மார்க் கார்னி, முன்னாள் பிரிட்டிஷ் கொலம்பியா பிரதமர் கிறிஸ்டி கிளார்க் மற்றும் வெளிநாட்டு விவகார அமைச்சர் மெலனி ஜோலி ஆகியோர் அடங்குவர் என்ற செய்தியும் கசிந்துள்ளதை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மேலும் ஜஸ்ரின் ட்ரூடோ பதவி விலகும் பட்சத்தில் மேலும் சில லிபரல் கட்சி எம்பிக்கள் மற்றும் அமைச்சர்கள் தாங்களும் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டால் என்ற என்ற எண்ணப்பாட்டில் உள்ளதாகவும் அவர்களில் முன்னாள் அமைச்சர் டொமினிக் லெப்ளாங்க், சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிதியமைச்சர், மற்றும் தொழில்துறை அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் மற்றும் போக்குவரத்து அமைச்சரும் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கனடியர் ஒருவரை மணம் செய்தவருமான அனிதா ஆனந்த் ஆகியோரும் அடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது