யாஷ் கன்னட சினிமாவின் முன்னணி நடிகராவார். ராக்கி என்ற கன்னட திரைப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகினார். அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்தார். கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்து இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் யாஷ். அப்படத்திற்கு பிறகு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். கே.ஜி.எஃப் சாப்டர் 2 படத்தை தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் கீதா மோகன்தாஸ் இயக்குகிறார். இப்படம் டிரக் மாஃபியா உலகில் நடக்கும் கேங்ஸ்டர் டிராமாவாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் திரைப்படத்தின் முதல்காட்சி நடிகர் யாஷின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஜனவரி 8 ஆம் தேதி காலை 10.25 மணிக்கு வெளியாகும் என படக்குழு பதாகை வெளியிட்டு அறிவித்துள்ளனர். படத்தில் நடிக்கும் பிரபலங்கள் குறித்து விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.