கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் தாய்லாந்த்து புற்றப்பட்டுச் சென்றார். ‘வேட்டையன்’ படத்தினை தொடர்ந்து ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன், கிஷோர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். இப்படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ரஜினிகாந்த் தாய்லாந்து செல்ல சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “கூலியின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜன. 13 முதல் 28 வரை நடைபெற உள்ளது” என்றார்.
