ஈரோடு கிழககு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பி.5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலை காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டில்லி சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டுள்ளார். அதன்படி, ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. மேலும், இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடையும். தேர்தல் தேதி அரிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறிகள் நடைமுறைக்கு வந்துள்ளன.