டில்வி சட்டப்பேரவை தேர்தல் பிப்.5ம் தெதி நடைபெறவுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் பிப்ரவரி 23ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதியை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, “டில்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 83.49 லட்சம், பெண்கள் 71.74 லட்சம் மற்றும் 20 முதல் 29 வயதுடையவர்கள் 25.89 லட்சம் பேர் உள்ளனர். டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக 13,033 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ம் தேதி எண்ணப்படவுள்ளன. வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 17ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும்” இவ்வாறு தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.