கனடாவில் வெற்றிகரமாக பிரசுரமாகி வரும் ‘உதயன்’ பத்திரிகையின் 1500 வது வார இதழை கடந்த 03-01-2025 அன்று வெளியிட்ட கனடா உதயன் வெளியீட்டாளர்கள் இந்த பெருமைக்குரிய செய்தியை உலகெங்கும் உள்ள வாசகர்கள்-வர்த்தகப் பெருமக்கள் – அபிமானிகள் – செய்தியாளர்கள் – எழுத்தாளர்கள் – நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றனர். கனடா உதயன் வார இதழ் 1996ம் ஆண்டு மே 3ம் திகதியன்று ஸ்காபுறோ ஶ்ரீ துர்க்கையம்மன் ஆலய மண்டபத்தில் வெளியிடப்பெற்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்குள்ள படங்களில் காணப்படும் ‘உதயன்’ பிரதிகள் பத்திரிகையின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் இதழாக 2021 ம் ஆண்டு வெளிவந்த போது எடுக்கப்பட்டவையாகும். அதன் பிரதிகள் கனடாவின் ரொறன்ரோ மற்றும் மொன்றியால் ஆகிய நகரங்களில் உதயன் அபிமானிகள் பலரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டன
உதயன் 2000வது இதழ் அதிக பக்கங்களோடு வெளிவரும் நாளிற்காக நாம் அனைவரும் காத்திருப்போம்.!