நேபாளத்தில் காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின. இதனை தொடர்ந்து, டில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.