பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘புக்லி’ என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.. இவர் தற்போது ராம் சரணுடன் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி வசூல் சதனை படைத்த ஸ்ட்ரீ 2 படத்தை தயாரித்த மடாக் பிலிம்ஸின் அடுத்த படத்தில் நடிக்க கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.