கனடாவில் ஆர்எஸ்விக்கு எதிரான தடுப்பூசிகள் தற்போது கிடைக்கின்றன – மேலும் ஆர்.எஸ்.வி குறித்த கேள்விகளுக்கு : வாக்ஸ்பேக்ட்ஸ்+ கிளினிக்கின் மருத்துவர்கள் உங்களுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளனர்.
ஆர்.எஸ்.வி என்றால் என்ன?
ரெசிபிராடோரி சின்சிடியால் வைரஸ் (ஆர்.எஸ்.வி) என்பது பொதுவான சுவாச தொற்று வைரஸாகும், இது சில பிரிவினருக்கு முக்கிய உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். உதாரணமாக, இருமல், சளி, ச்சுத்திணறல் மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய்களைப்போல இருக்கும்,
பெருமளவு பாதிக்கப்பட்டவர்களில், ஆர்.எஸ்.வி மோசமான சுவாசப்பை தொற்றுக்களை அல்லது நிமோனியா போன்ற நோய்களை உண்டாக்கலாம், குறிப்பாக கீழ்கண்டவர்களுக்கு:
- ஆறு மாதத்திற்கு குறைந்த குழந்தைகள்
- 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள்
- அடிப்படை உடல்நலப் பிரச்சினைகளுடன் வாழ்பவர்கள்
ஆர்.எஸ்.வி எப்படி பரவுகிறது?
ஆர்எஸ்வி தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் கைகளை நேரடியாக தொடுவதாலும், இருமல் அல்லது தும்மலின் போது வெளியேறும் துளிகள் மூலமாகவும் பரவுகிறது. இந்த வைரஸ் மிகவும் விரைவாக பரவக்கூடிய தன்மையுடையது, சிறு குழந்தைகள் அடிக்கடி ஒன்றுகூடும் இடங்களில் இது மிக விரைவாக பரவும்.
பச்சிளங்குழந்தைகளுக்கான ஆர்எஸ்வி தடுப்பு முறைகள் என்ன?
1.எதிர்ப்புசக்தி மூலம் தடுப்பு முறை (பெய்ஃபோர்டஸ்)
பெய்ஃபோர்டஸ் என்பது பச்சிளங்குழந்தைகளுக்கு ஒருமுறை செலுத்தப்படும் எதிர்ப்பு மருந்தாகும்; இது ஆர்எஸ்வி வைரஸிலிருந்து 6 மாதங்கள் வரை பாதுகாப்பளிக்கிறது.
பரிந்துரை மற்றும் வழங்கப்படுவதன் விபரம்:
ஆர்எஸ்வி பருவத்துக்கு முன்னதாக உள்ள 2024ல் பிறந்த பச்சிளங்குழந்தைகள்.
இரண்டாவது ஆர்எஸ்வி பருவத்தை அடைய இருக்கும் 24 மாத அதிக ஆபத்தில்லுள்ள பச்சிளங்குழந்தைகள்
2.தாய்மார்களுக்குரிய ஆர்எஸ்வி தடுப்பூசி (அப்ரிஸ்வோ):
கர்ப்பகாலத்தின் 32 முதல் 36 வாரங்களுக்குள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
தாய்க்கு உருவாகும் எதிர்ப்புசக்தி குழந்தைக்கு சென்று அடைவதால், குழந்தை தனது முதல் ஆறு மாதங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
பச்சிளங்குழந்தைகளுக்கு பெய்ஃபோர்டஸ்ஐ பரிந்துரைக்கிறோம், ஏனென்றால் தாயின் தடுப்பூசியுடன் ஒப்பிடுகையில், தீவிரமான ஆர்எஸ்வி தொற்றுகளுக்கு எதிராக இது சுமார் 80% சதவீதம் அதிக செயல்திறனை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும், பச்சிளங்குழந்தைகளுக்கு பெய்ஃபோர்டஸ் பாதுகாப்பானதா?
ஆம், பெய்ஃபோர்டஸ் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை கனடாவின் சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. ஊசி போடப்பட்ட இடத்தில் லேசான வீக்கம் அல்லது வலி மற்றும் காய்ச்சல் பொதுவான பக்க விளைவுகளாகும். கடுமையான பக்க விளைவுகள் அரிதானவை.
பச்சிளங்குழந்தைகள் ஆர்எஸ்வி தடுப்பை எங்கு பெறலாம்?
பெய்ஃபோர்டஸ் பெரும்பாலும் பிறப்புக்குப் பின்னர் மருத்துவமனையில் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது சுகாதார நிலையங்கள் வழியாக வழங்கப்படுகிறது.
ஆர்எஸ்வி தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுடைய முதியவர்களும், அபாயத்தில் உள்ளவர்களும் யார்?
ஒன்டாரியோ மாநிலத்தில், ஆர்எஸ்வி தடுப்பூசி கீழ்கண்ட 60 வயதுக்கும் மேற்பட்ட அதிக ஆபத்துக்குள்ளாகும் மக்கள் தொகைக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது:
முதியோர் இல்லங்கள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு மையங்கள்.
டயாலிசிஸ் சிகிச்சை பெறும் நோயாளிகள், உறுப்புப் பரிமாற்றம் அல்லது நுண்கண தானம் பெற்றவர்கள்.
வீடற்ற நிலையில் உள்ளவர்கள்
முதல் நாட்சி மக்கள், இனூயிட், அல்லது மெட்டிஸ் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள்
முதியவர்களுக்கான ஆர்.எஸ்வி. தடுப்பூசிகள் என்ன?
- அரெக்ஸ்வி: முதியவர்களுக்கு ஏற்படும் கடுமையான ஆர்.எஸ்.வி நோயை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி.
- அப்ரிஸ்வோ ஆர்.எஸ்.வி தொடர்புடைய கீழ் சுவாச பாதை தொற்று நோயைத் தடுப்பதில் செயல்திறமிக்க இருவகை தடுப்பூசி.
ஆர்எஸ்வி தடுப்பூசியை மற்ற தடுப்பூசிகளுடன் கொடுக்கலாமா?
ஆம். ஆர்எஸ்வி தடுப்பூசியை காய்ச்சல் மற்றும் கோவிட்-19 போன்ற பருவ தடுப்பூசிகளுடன் ஒரே நேரத்தில் எடுப்பது பாதுகாப்பானது என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது சுவாச பாதை தொற்று இருப்பவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க உதவும்.
ஆர்.எஸ்.வி தடுப்பூசிகள் முதியவர்களுக்கு பாதுகாப்பானதா?
ஆர்.எஸ்.வி தடுப்பூசிகளான அரெக்ஸ்வி மற்றும் அப்ரைஸ்வோ இரண்டும் மிகவும் பாதுகாப்பானவை. குத்திய இடத்தில் சிறிய வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகியவை பொதுவான பக்க விளைவுகளாகும்.
வாக்ஸ் ஃபாக்ட்ஸ் + கிளினிக்கில் மருத்துவருடன் தொலைபேசி சந்திப்பை எப்படி பெறுவது?
நீங்கள் ஆர்எஸ்வி தொடர்பான கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு மருத்துவருடன் இரகசிய, இலவச மற்றும் தனிப்பட்ட விளக்கம் பெற விரும்பினால்
இலவச மருத்துவ சந்திப்புக்கு: www.shn.ca/VaxFacts இணையதளத்தை பார்வையிடவும்.