பு.கஜிந்தன்
கனடா மொன்றியால் புருட்ஸ் ஹபி வர்த்தக நிறுவன உரிமையாளரம் சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களால் மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் உதவி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 பயனாளிகளுக்கு 6000 ரூபா பெறுமதியான உலருணவுப் பொதியும், பொங்கல் பொருட்களும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தலைமையில் குறித்த நிகழ்வு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு குறித்த உலருணவு பொதிகளை பகிர்ந்தளித்தனர். மேற்படி நிகழ்வில் சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்கள் சார்பில் கனடா வாழ் வானொலி நிலைய அதிபர் வசி (9எப்எம் வானொலி )அவர்களும் கலந்து கொண்டார்