பிரபல பின்னணி பாடகர் ஜெயசந்திரன் (80) உடல்நலக்குறைவால் கேரளாவின் திருச்சூரில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பாடகர் ஜெயசந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை ஜெயச்சந்திரன் பாடியுள்ளார். தமிழில், ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு, ஒரு தெய்வம் தந்த பூவே, காத்திருந்து காத்திருந்து போன்ற பல்வேறு பிரபல தமிழ் பாடல்களையும் பாடியுள்ளார். 1997ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர் பின்னணி பாடகர் பி.செயச்சந்திரன்.
