சென்னை ஐஐடி சாரங் கொண்டாட்டம் ஜனவரி 9 முதல் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. ஐஐடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்றார். விழா மேடையில் பேசிய இளையராஜா, “ஐஐடியில் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மிகச்சிறந்த விஷயம். இசை உலகமெல்லாம் பரவி உள்ளது. இதயத்தில் இருந்து வருவது இசை. இசைக்கு மதம், மொழி கிடையாது. இந்தியாவில் சுதந்திர வேட்கையை ஊட்டியது இசைதான். கலையும், இசையும் இல்லையென்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை” என்று நெகிழ்வாகப் பேசியிருக்கிறார். இதன்பின் பாரதியாரின் பாடல் ஒன்றை மாணவர்கள் மத்தியில் பாடி இருக்கிறார். இளையராஜாவின் குரலைக் கேட்டு மாணவர்கள் உற்சாகம் அடைந்திருகின்றனர்.