(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா)
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது,
ஆனால் அவன் செய்த தீமையை அந்த
நொடியிலே மறந்து விடவேண்டும்
பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த
திருமகனாம் குமார் என்னும் அழகனே
கடல் கடந்து நீ சென்று நாம் வாழ வழிவகுத்தாய்
இன்றும், என்றும் உன் நினைவு அழியாது
மனங்களில் நிறைந்தாய் மாசற்ற மனிதராய் உணர்ந்தோம்
குடும்பத்தின் ஒளிவிளக்காய்,
இன்பம், துன்பம் எது வந்தெதிர் கொண்டாலும்
வாழ்க்கையில் இரண்டும் ஒன்றென எதிர் கொண்டு
வாழ்ந்து காட்டி எங்கள் வாழ்விற்கு அடித்தளம் அமைத்து
சீரான வழி காட்டினாய்
நாம் அழுவதை நிறுத்திவிட்டோம்
புலம்புவதை நிறுத்திவிட்டோம், ஆனாலும் நினைப்பதை
மட்டும் நிறுத்த முடியவில்லை…..
எங்கள் குடும்பத்தின் அன்புத் தெய்வங்களின் ஆத்மாக்கள்
சாந்திபற 11-01-2025 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
அருளகம் கோவிற்குளம் வவுனியாவில் சிறார்கள்,
முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
என்றும் உன் நினைவுடன் வாழும் குடும்பஉறவுகள்