இளைய தலைமுறையைச் சேர்ந்தவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞருமான ஆதிரை சிவபாலன் றொசான் அவர்களது ‘கானாமிர்தம் இசைக் கல்லூரி வழங்கிய வருடாந்த இசை நிகழ்ச்சி இளைய தலைமுறையைச் சேர்ந்தவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞருமான ஆதிரை சிவபாலன் றொசான் அவர்களது ‘கானாமிர்தம் இசைக் கல்லூரி வழங்கிய வருடாந்த இசை மற்றும் வாத்திய இசை நிகழ்ச்சி கடந்த 04-01-2025 அன்று சனிக்கிழமையன்று
Richmond Hill Centre for Performing Arts கலா மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கர்நாடக இசையும் மேற்கத்தைய இசைக் கருவிகளும் சங்கமித்து அதனாடு தெய்வீகக் கலையாம் பரதக் கலையை செவ்வனே கலைஞர்களும் நடனமாடியும் சிறியோர் முதல் வளர்ந்தோர் வரை மேடையில் தோன்றி தங்கள் அற்புதமாக படைப்புக்களை எமக்காக வழங்கிய இந்த விழாவில் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கிடைத்த அழைப்புக்கு இணங்க நாம் அங்கு சென்று அமைதியாக சபையின் முன்வரிசையில் அமர்ந்திருந்து இசையின் முழுப் பரிமாணங்களையும் அனுபவித்தோம்.
விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கனடாவில் மேற்கத்தைய மற்றும் கர்டநாடக இசையையும் அதற்கான கருவிகளையும் அத்தோடு மேற்கத்தைய இசைக்கருவிகளிலும் நன்கு பரிட்சியமுள்ள கலைஞர் அரவிந்தன் அவர்களின் மெகா ரியுனர்ஸ் குழுவினர் பக்கவாத்திய இசை வழங்க இந்த விழா இனிமையின் உச்சத்திற்கு எம்மை அழைத்துச் சென்றது என்றால் அது மிகையாகாது.
மேற்கத்தைய இசைக் கருவிகளின் சங்கம் அங்கு இடம்பெற்றிருந்தாலும் கர்நாடக சங்கீதத்தின் அத்திவாரம் சிதைக்கப்படாமலுமல் மிகுந்த சிரத்தை எடுத்து இந்த விழாவை சிறப்புற இறுதிவரை நகர்த்திச் சென்ற ஆசிரியை ஜெயராணி சிவபாலன் (ஆசிரியை ஆதிரையின் அன்னையார்) திருமதி ஆதிரை சிவபாலன் ரொசான் மற்றும் மெகா ரியுனர்ஸ் இசைக்குழுவின் ஸ்தாபகரும் தலைவருமான அரவிந்தன் ஆகியோரின் இணைந்த பங்களிப்பு போற்றுதற்குரியதாக அமைந்திருந்தது.
இந்த ‘கானாமிர்தம் இசைக் கல்லூரியில் தொடர்ச்சியாக இசை பயின்று வரும் அனைத்து மாணவ மாணவிகள் எதிர்காலத்தில் கல்வியிலும் இசைத்துறையிலும் மேலோங்கி வளர்ந்து விருட்சங்களாக விளங்க கனடா உதயன் ஆசிரிய பீடம் வாழ்த்துகின்றது.
— சத்தியன்