மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், அரசு ஆதரவு பெற்ற படையினரும் இந்த பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் கட்சினா மாகாணத்தில் அரசு ஆதரவு படையினரை குறிவைத்து பயக்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
