தமிழ் சினிமாவில் செம மாஸ் கம்போ தனுஷ் – வெற்றிமாறன். இவர்கள் இருவரும் முதன் முதலில் இணைந்த திரைப்படம் பொல்லாதவன். முதல் படத்திலேயே இந்த கூட்டணி வெற்றியை தன்வசப்படுத்தியது. இதை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரனை தொடர்ந்து இவர்கள் இருவருடைய கூட்டணியில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.
அடுத்ததாக வடசென்னை 2 படத்தில் இவர்கள் இருவரும் எப்போது இணையப் போகிறார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் வெற்றி மாறன் – தனுஷ் இணையவுள்ளதாக ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூரவாமக அறிவித்துள்ளது. ஆனால் இந்த படம் வடசென்னை 2 இல்லை எனவும் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல வெற்றிகளைப் படங்களை கொடுத்த தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.