– தமிழ்நாட்டுக்குச் சென்று தாயகம் திரும்பிய சிறிதரன் எம்.பி தெரிவிப்பு!
இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதான் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வின்
பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன். வெகு விரைவில் இந்திய இலங்க மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும்.
தமிழக அரசின் அழைப்பின் பிரகாரம் சென்னையில் அயலகத் தமிழர் தின நிகழ்வில் அண்மையில் கலந்து கொண்ட போதே தமிழக முதலமைச்சரிடம் இக்கோரிக்கையை விடுத்திருந்தேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் விரைவில் நாடாத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார் என்றும் எம்பி ஶ்ரீதரன் அங்கு தெரிவித்தார்