தைவானை உலகளாவிய நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் இணைய கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொடர்பு கேபிளை சீனாவுடன் தொடர்புடைய கப்பல் ஒன்று சேதப்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தைவான் அரசு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், கடலுக்கடியில் தகவல் தொடர்பு கேபிள்களுக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடு கண்டறியப்பட்டால் பதிலடி கொடுப்பதற்கு, கடலோர காவல்படைக்கு உதவ தேவைப்பட்டால் தைவான் தனது கடற்படையை அனுப்பும் என்று ராணுவ அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்தார். ஆயுதப்படைகள் கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து கடல் கேபிள் அமைந்துள்ள பகுதிகளை கண்காணிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.
