15ம் திகதி புதன்கிழமையன்று தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன், யாழ்ப்பாணம் மாவட்ட சர்வ மதக் குழு உறுப்பினர்களும், SOND நிறுவனத்தினரும் இணைந்து நடாத்திய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் – சுண்டுக்குழியில் உள்ள SOND அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் விருந்தினர்களாக கேதீஸ்வரசர்மா குருக்களும், அருட்தந்தை அருட்பணி. செபஸ்ரியாம்பிள்ளை அன்ஸ்லி றொஷான் அடிகளாரும், மெளலவி அஸ்லம் அவர்களும் இணைந்து சிறப்பித்தனர்.
மேலும் யாழ்ப்பாணணம் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இன மத பாகுபாடின்றி ஒரே குடும்பமாக இணைந்து பொங்கல் பொங்கினர்.
நிகழ்வின் இறுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதக் குழுவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இக் கலந்துரையாடலை யாழ்ப்பாணம் மாவட்ட சர்வமதக் குழு இணைப்பாளர் ஜென்சி வசதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.