அல்-காதிர் அறக்கட்டளை மூலம் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையோடு இம்ரான் கானுக்கு ரூ.10 லட்சம் மற்றும் புஸ்ரா பீவிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறினால் இம்ரான் கானுக்கு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும், புஸ்ரா பீவிக்கு 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது பி.டி.ஐ. கட்சியை சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது