விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக பங்கேற்றவர் நடிகர் பாலாஜி முருகதாஸ். சீசன் 4 பிக் பாஸில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன்பின்னர் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஓ.டி.டி.யில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலும் பாலாஜி போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார். இதிலும் தனது சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி டைட்டில் வின்னர் ஆனார், பாலாஜி முருகதாஸ். இவர் தற்பொழுது ‘பயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சதீஷ் குமார் இயக்கியுள்ளார். இப்படம் 2020-ம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. காசி என்பவர் காம பித்து பிடித்தவன். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதை படம் பிடித்து அவர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் ஒரு குணமுடையவன். இக்கதாப்பாத்திரத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளார். இவருடன் சந்தினி தமிழரசன், ரச்சிதா மஹாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி சான், சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறன. இந்நிலையில், ‘பயர்’ படத்தின் வெளியீடு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 21-ம் தேதி வெளியாக உள்ளது.