அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ல லாஸ் ஏஞ்சல்சில் கடந்த 7 ஆம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, ஹெலிகாப்டர்கள் வாயிலாக கடல் நீரில் தண்ணீர் இறைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒன்பது நாட்களுக்கும் மேலாக தீ எரிவதால் இதுவரை மொத்தம் 40,000-க்கும் அதிகமான ஏக்கர் பரப்பை எரித்து நாசமாக்கியுள்ளது. 12,000-க்கும் அதிகமான கட்டமைப்புகள் தீயால் அழிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தீ தொடர்ந்து பரவ காரணமாக இருந்த காற்றின் வேகம் தற்போது கொஞ்சம் தணிந்துள்ளது. இதனால் தீயை அணைக்கப் போராடி வரும் தீயணைப்பு வீரர்களின் பணிகளில் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. தீ அணைக்கும் பணிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
