2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அஜய் ஞானமுத்து அறிமுகமானார். இதனையடுத்து அவர் இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமான்டி காலனி 2 ஆகிய படங்களை இயக்கினார். தற்போது அவர் டிமான்டி காலனி 3 படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது காதலியை திருமணம் செய்துள்ளார். இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது. பல்வேறு திரை பிரபலங்கள் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.