மரன் படத்தைத்தொடர்ந்து சாய்பல்லவி நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘தண்டேல்’. இதில், நடிகர் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்துள்ளார். ‘கார்த்திகேயா 2’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான சந்து மொண்டேட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னிவாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஸ்ரீகாகுளத்தில் உள்ள மீனவர்களின் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தண்டேல் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமையை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.