தைவான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஜிங் நகரில் இருந்து வடக்கே 12 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இரவு 12.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் நிலநடுக்கத்தால் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் 15 பேர் லேசான காயமடைந்தனர். நிலநடுக்கத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை.