அயர்லாந்தில் கடந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் மத்திய வலதுசாரி கட்சியான பியன்னா பெயில் கட்சி அதிகபட்சமாக 48 தொகுதிகளில் வென்றது. மற்றொரு மத்திய வலதுசாரி கட்சியான பைன் கேல் கட்சி 38 இடங்களை பிடித்தது. இடதுசாரி மையக் கட்சியான சின் பைன் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எந்த கட்சிகளும் பெரும்பான்மை பெறாததால் புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. அதன்பின்னர் கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக பியன்னா பெயில், பைன் கேல் கட்சிகள் பேச்சுவார்த்தையை தொடங்கின.
கடந்த சில வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. புதிய அரசு இன்று பதவியேற்க உள்ளது. பிரதமராக பியன்னா பெயில் கட்சியின் தலைவர் மைக்கேல் மார்ட்டின் (வயது 64) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கூட்டணி ஒப்பந்தப்படி, முதல் மூன்று ஆண்டுகளுக்கு மார்ட்டின் பிரதமராக பதவி வகிப்பார். பைன் கேல கட்சியின் சைமன் ஹாரிஸ் (தற்போதைய பிரதமர்) துணை பிரதமராக பதவி வகிப்பார். பின்னர் மீதமுள்ள ஆட்சிக்காலத்தில் சைமன் ஹாரிஸ் பிரதமராகவும், மார்ட்டின் துணை பிரதமராகவும் செயல்படுவார்கள்.