கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் டாக்சிக். இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடிக்கிறார். படத்தில் மேலும் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் பட்டியல் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. இந்நிலையில் நடிகர் அக்ஷய் ஓபராய் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் இப்போது ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் டாக்சிக் படத்தில் நடிக்கிறேன். நயன்தாராவும் படத்தில் ஒரு பகுதியாக இருக்கிறார். படக்குழுவினர் படம் பற்றிய தகவல்களை வெளியிடாதால் நான் படம் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. டாக்சிக் படத்தில் கியாரா அத்வானி, தாரா சுதாரியா, சுருதிஹாசன் நடித்துள்ளனர். போதைப்பொருள் விவகாரத்தை மையமாக கொண்டு அதிக பொருட் செலவில் படம் உருவாகி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
