கனடாவைத் தளமாகக் கொண்ட Behind Me International Media ஊடக நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘Taste the Challenge’ திறன் காண் போட்டி நிகழ்ச்சி
கனடாவைத் தளமாகக் கொண்ட Behind Me International Media ஊடக நிறுவனம் கடந்த சில வருடங்களாக கனடாவிலும் இந்தியாவிலும் கலையகங்களை அமைத்து அதன் மூலம் தமது ஊடகப் பணிகளை விஸ்த்தரித்து வருகின்றது .இந்த நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்துள்ள ‘Taste the Challenge’ திறன் காண் போட்டியின் நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வு மிசிசாகா நகரில் அமைந்துள்ள அவர்களது தலைமையகக் கலையகத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த அறிமுக நிகழ்விற்கு உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கனடா பல்லின பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உபு தலைவருமான ஆர். என். லோகேந்திரலிங்கம் அழைக்கப்பெற்றிருந்தார்.
அன்றைய போட்டி நிகழ்ச்சி முதலாவது நிகழ்ச்சியாக இருந்த காரணத்தால் ஆங்கிலத்தில் இடம் பெற்றது. எனினும் தொடர்ந்து தமிழ் மொழி ஊடாகவும் இந்த ‘Taste the Challenge’ திறன் காண் போட்டியின் நிகழ்ச்சி விரைவில் ஒளிப்பதிவு செய்யப்படும் என Behind Me International Media ஊடக நிறுவன நிர்வாக அறிவித்துள்ளது.