ந.லோகதயாளன்.
வடக்கு மாகாணச் சந்தைகளில் நிலவும் 10ற்கு ஒன்று கழிவு நடைமுறை நீக்கப்படக் கூடியதா என்ற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
வடக்கு மாகாணச் சந்தைகளிற்கு வரும் மரக்கறி வகைகளில் விவசாயிகளிடம் சந்தை வியாபாரிகள் 10ற்கு ஒன்றை கழிவாக எடுப்பதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக கடந்த 10 ஆண்டுகளாக பலரும் சுட்டிகாட்டியபோதும் அதனை இன்றுவரை தடுக்க முடியாமல் இருந்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் கடந்த ஆண்டு இறுதியில் கருத்துரைத்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து 10ற்கு ஒன்று கழிவு நடைமுறை அகற்றப்படும் எனத் தெரிவித்தபோதும் அது இதுவரை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் வடக்கின் விவசாய அமைச்சரான பொ.ஐங்கரநேசன் இதேபோன்ற கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தபோதும் அன்றும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல்போனது மட்டுமன்ற அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தச் சென்ற அதகாரிகள்தான் தமது விற்பனைக்கே தடையாக இருப்பதுபோன்று வியாபாரிகள் அன்றி விவசாயிகளும் கருத்துரைத்தனர்.
இப்போது வடக்கு ஆளுநரின் கருத்து தொடர்பில் திருநெல்வேலிச் சந்தையில் கடந்த 23 ஆண்டுகளாக மரக்கறி விற்பனையில் ஈடுபடும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நாம் 10ற்கு ஒன்றே அல்லது 100ற்கு 6 அல்லது 7 கிலோ மேலதிகம் வரும்போது அதனை நீக்கி பணம் வழங்கும்போது நாமும் விவசாயியும் இணங்கியே பொருள் கொள்வனவில் ஈடுபடுகின்றோம். 10ற்கு ஒன்று கழிக்கவே முடியாது என்பவர்கள் நாம் மொத்தமாக 100 கிலோ வாங்கினால் அரைக்கிலோ கால் கிலோ ஒரு கிலோவாக விற்கும்போது 90 அல்லது 95 கிலோவே விற்க முடியும், இதனைவிட கழிவு, முற்றல், சேதாரம் அனைத்தும் காணப்படும் அதனை எவ்வாறு ஈடு செய்வது எனக் கேள்வி எழுப்பினார்.
இதேநேரம் சாவகச்சேரியில் 16 ஆண்டுகளாக விற்பனையில் ஈடுபடும் கல்வயலைச் சேர்ந்த வியாபாரி கருத்து கூறும்போது இதனை நடைமுறைப் படுத்துமாறு விவசாயிகளே அதிகம் குரல் எழுப்பாதபோது அதிகாரகளே தூண்டி விடுவதாக தெரிகின்றது. ஒருவேளை விவசாயிகள் கோருகின்றனர் என்று வைத்தால் சகல சந்தைகளிலும் 5 இடங்களை விவசாயிகளிற்கு ஒதுக்கி வழங்குங்கள் அதிலே விவசாயி தனது உற்பத்தியை சந்தை வரியை செலுத்தி தானே விற்பனை செய்யட்டும். அதன் பின்பு விவசாயியே வியாபாரிகளின் நிலையை அறிந்துகொள்வார்கள். அதற்காக விவசாயிகளிற்கு இது தொடர்பில் அறிவு கிடையாது என நாம் ஒருபோதும் கூற மாட்டோம். ஆனால் அதிகாரிகளிற்கு இதுதொடர்பில் அறிவு இல்லை எனக் கூற முடியும் என்றார்.
இதேநேரம் மாகாண சபை ஆட்சிக் காலத்தில் ஓர் குளப்பம் ஏற்பட்ட சந்தையான மருதனார்மடம் சந்தை வியாபாரி ஒருவர் இதுதொடர்பில் கூறுகையில் ஓர் நிர்வாகத்தில் பிரச்சணை காணப்பட்டால் இரு தரப்பையும் அழைக்கின்றீர்ள், அண்மையில் தனியார் பேரூந்தும் இ.போ.சபையும் இணைந்த சேவையை நடாத்த வேண்டும் என்பது தொடர்பான பிரச்சணைக்கும் இரு தரப்பையும் அழைக்கும் ஆளுநர் எமது விடயத்திற்கு மட்டும் ஏன் ஒரு தரப்பை மட்டும் வைத்து தீர்ப்பு கூறுகின்றார்.
இந்த நாட்டில் ஓர் கொலைக் குற்றவாளியாக இருந்தாலும் அவரின் கருத்தைக் கூற நீதிமன்றங்களே சந்தர்ப்பம் அளிக்கும்போது 25 வருட நிர்வாக அதிகாரி மட்டுமன்றி எமது அயல் கிராம அதிகாரியான ஆளுநர் ஒரு தரப்பின் கருத்தைக் கேட்டு ஒரு முகமாக தீர்ப்பளித்து விட்டார் என்கின்றார்.
சுன்னாகம் சந்தையில் மரக்கறி விற்பனைய்யில் ஈடுபடும் ஓர் தாயார் கருத்துக் கூறும்போது தூக்கிலே பொருளிற்கு விலை நிர்ணயம் செய்யும்போது வெளித்தோற்ற பொருளை வைத்தே தீர்மானிக்கின்றோம். பின்பு விற்பனை செய்நும் இடத்தில் கொட்டும்போது கத்தரிக்காயில் சூத்தை, வெண்டிக்காயில் முத்தல், முருங்கக்காய் முத்தல், மரவள்ளிக் கிழங்கு வேர் என எவ்வளவோ கழிவு ஏற்டும் இவற்றை எல்லாம் தவிர்க்கவே இந்த கழிவு முறை பின்பற்றப்படுகின்றது. இதனை நீக்க வேண்டுமானால் கொண்டு வரும் மரக்கறிகளை கீழே கொண்டி அதன் பின்பு தெரிவு செய்து எடித்து கூற விவசாயிகள் அனுமதிப்பார்களா அதுவும் முடயாத காரியம் ஏனெனில் 4 மணி முதல் விவசாயிகள் மரக்கறிகளை கொண்டு வருவார்கள் நாம் மரக்கறியில் இருக்கும் நம்பிக்கையை விடவும் அதனை கொண்டு வரும் விவசாயி மீது உள்ள நம்பிக்கையோடு இந்த கழிவும் ஈடு செய்யும் என்ற நம்பிக்கையிலேயே மரக்கறியை கொள்வனவு செய்கின்றோம் என்றார்.
இவ்வாறெல்லாம் விவசாயிகள் கூறுவது தொடர்பில் உரும்பிராயை சேர்ந்த விவசாயி இராசதுரை நாகராசா கூறுகையில்,
10ற்கு ஒன்று கழிவு நடைமுறை இலங்கைநிலேயே வடக்கில் மட்டும்தானே உள்ளது.்அவ்வாறானால் ஏனைய மாகாணத்தில் வியாபாரிகளே இல்லையா அல்லது அங்கே உற்பத்மி செய்நும் பொருள்களில் மட்டும் சேதாரமே ஏற்படாதா என்பதற்கான பதிலினையும் வியாபாரிகளே பதிலளிக்க வேண்டும். வாழைக் குழைகளிற்கு ஒரு கழிவு கோரினால் அதில் ஓர் நியாயம் உண்டு. அனைத்துப் பொருள்களிற்குமே கோருவதனை ஏற்க முடியாது என்றார்.
கோண்டாவிலைச் சேர்ந்த கத்தரி சிறி என அழைக்கப்படும் ந.சிறீஸ்கந்தராயா கருத்து தெரிவிக்கையில் நானும் 35 ஆண்டுகளாக விவசாயமே மேற்கொள்கின்றேன் இந்த கழிவு முறையை மட்டும் நீக்க முடியவில்லை. தற்போது தேங்காயும் கிலோவிற்கு வந்து விட்டது அப்படியானால் தேங்காயிலும் இந்த கழிவை கோருவார்களா. உள்ளூர் உற்பத்தியில் கழிவு கோரும் விவசாயிகள் இங்கிருந்து சென்று தம்புள்ள சந்தையில் கொள்வனவு செய்து வரும் மரக்கறிகளில் கழிவைப் பெற முடியுமா என்றார்.
இவை தொடர்பில் சுன்னாகத்தைச் சேர்ந்த விவசாயியான இராசையா கருத்து தெரிவிக்கையில்,
விவசாயம் செய்யும் எம்மால் சந்தையில் இருந்து ஒரு கிலோ அரைக் கிலோவாக நெறுத்து விற்று வந்து தோட்டத்தை கவனிக்க முடியாது என்பதனை அறிந்தும், சில்லறையாக விற்பனை செய்வதற்கான தொடர்பாடலிற்கு காத்திருப்பதில்லை என்பதனாலே எமக்காக அமைக்கப்படும் உழவர் சந்தைகளை நாம் பயன்படுத்துவதில்லை. மாறாக உழவர் சந்தை அல்லது தோட்டங்களிலேயே விற்பனைகளை அதிகரித்தால் இந்த 10ற்கு ஒன்று கழிவு முறை தானாகவே அகலும் என்றார்