கடந்த 21-01-2025 அன்று செவ்வாய்க்கிழமை ஒன்றாரியோ மாகாண அரசின் அங்கத்தவரும் பல்கலாச்சார உறவுகள் மற்றும் சிறுவர் நலன் பேணல் ஆகிய அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளருமான லோகன் கணபதி அவர்கள் ஏற்பாடு செய்த வரவேற்பு உபசாரத்தில் கலந்து கொண்ட மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள் அங்கு கலந்து கொண்ட தமிழ் பேசும் ஆதரவாளர்களோடு நெருக்கமாக உ ரையாடி மகிழ்ந்தார்.
இங்கு காணப்படும் படத்தில்;வர்த்தகப் பிரமுகர் BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடக நிறுவன அதிபர் கனா செல்வராஜா மற்றும் அவரது துணைவியார் திபி மற்றும் வீடு விற்பனை முகவர் அமலன் அவர்கள் அவர்களோடு ‘உதயன்; பிரதம ஆசிரியர் அவர்கள் முதல்வர் டக்போர்ட் அவர்களுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்துக்களைத் தெரிவிப்பதைக் காணலாம்.
அத்துடன் அங்கு உ ரையாற்றிய MPP லோகன் கணபதி அவர்களும் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களும் தங்கள் உரைகளில் பல பயனுள்ள கருத்துக்களை முன்வைத்து உரையாற்றி சபையோரின் கரகோசத்தைப் பரிசாகப் பெற்றார்கள்.
அவர்கள் இருவரது உரைகளும் சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் சிம்மாசன உரையின் போது தெரிவித்த கருத்துக்களும் அதற்கு முன்னதாக கனடா என்னும் தனித்துவமான தேசத்தையும் அதன் பிரதமரையும் விமர்சனம் செய்து தெரிவித்த தரமற்ற கருத்துக்களையும் விமர்சனம் செய்யும் வகையில் அமைந்திருந்தன.
குறிப்பாக ‘கனடா விற்பனைக்கு அல்ல’ என்று MPP லோகன் கணபதி அவர்களும் முதல்வர் டக் போர்ட் அவர்களும் மறைமுகமாகப் பேசிய போது அதைப் புரிந்து கொண்ட சபையோர் கரகோசம் செய்தார்கள்.
அங்கு கலந்து கொண்ட பலர் வர்த்தக முன்னோடிகளாகவும் அரசியல்வாதிகளாக இருந்ததாலும். அன்றை நிகழ்வு களைகட்டிய ஒன்றாக இருந்தது என்றால் அது மிகையாகாது.