இயக்குநர் பா. ரஞ்சித்-இன் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் “பாட்டல் ராதா.” பா. ரஞ்சித்-இன் உதவி இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள பாட்டல் ராதா திரைப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 24 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு குடி நோயாளியின் வாழ்க்கையும் , அதனால் அவரது குடும்பம் மற்றும் சுற்று சூழல் எப்படி பாதிப்படைகிறது அந்த குடியில் இருந்து மீண்டாரா? இல்லையா? என்பதை பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் குரு சோமசுந்தரம் , பாரி இளவழகன், மாறன் மற்றும் சிலர் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டு இருக்கின்றனர். மிகவும் நகைச்சுவையாக இந்த காட்சி அமைந்துள்ளது.