இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘புளூ ஸ்டார்’. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டை நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், நடிகர் சாந்தனு இப்படம் குறித்த நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “இந்த பயணமும், இப்படத்தின் வெற்றியையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்கவேமாட்டேன். எங்களை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.