ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள இனுகு மாகாணத்தில் நேற்று மாலை பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லோரி சென்றுகொண்டிருந்தது. இனுகு-ஒனிஸ்டா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லோரி முன்னே சென்ற வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டேங்கர் லோரியில் இருந்த பெட்ரோல் தீப்பற்றி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புப்படையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.