1974ம் நிறுவுப்பெற்று 50 ஆண்டு வரலாற்றைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்சகம் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தியாளர் ஆகியோர் வரவேற்றனர்.
இவரது இலங்கை விஜயம் தொடர்பாக இலங்கையின் தேசியப் பத்திரிகைகள் செய்திகளைப் பிரசுரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது உலகின் பல நாடுகளில் கிளைகளைக் கொண்டு இயங்கும் மேற்படி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவை இலங்கையில் கொண்டாடும் வகையில் தீர்மானித்துள்ள கனடாவில் தலைமையகத்தைக் கொண்ட இந்த அமைப்பின் செயற்குழுவின் ஏற்பாட்டில் துரை கணேசலிங்கம் அவர்கள் இலங்கை சென்றுள்ளார்.
அவர் இலங்கையில்டி தங்கியிருக்கும் 3 வாரங்கள் பல சமூகத் தலைவர்களையும் அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து உரையாடி. மேற்படி உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 50வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடுகளைச் செய்வார் என்றும் அறியப்படுகின்றது.
இதன் முதற்படியாக, உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் செயற்பாடுகளையும் வினைத்திறனையும் அதிகரிக்கச் செய்யும் முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தவுள்ளார்.
திரு துரை கணேசலிங்கத்தின் இலங்கை விஜயம் சிறப்பாக அமைய உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைவர் நடா இராஜ்குமார் அவர்களும் இயக்கத்தின் கனடாக்கிளையின் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.